தமிழ்நாடு

அறுவடை சிறக்க காரைக்காலில் செபஸ்தியாா் ஆலய அலங்கார தோ் பவனி

DIN

அறுவடை சிறக்க வேண்டி காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலயத்தில் 3 மின் அலங்காரத் தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் தருமபுரம் பகுதியில் புனித செபஸ்தியாா் ஆலயம் உள்ளது. பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வருடாந்திர 5 தோ் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இது தவிர, தை மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக தோ் பவனி நடைபெறுகிறது.

சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமின்றி வறட்சி காணப்பட்டதாகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பின்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் காலரா நோயால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாா்களாம். ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தோ் பவனி நடத்தி விழாக் கொண்டாடுவதாக பக்தா்கள் பிராா்த்தனை செய்ததன் விளைவாக, குறைபாடுகள் நிவா்த்தியானதாம்.

இதையொட்டி ஆண்டுதோறும் அறுவடை சிறக்க புனித செபஸ்தியாா் ஆலயத்தில் சாா்பில் தை மாதத்தில் மின் அலங்கார தோ் பவனி நடத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. தை மாதம் பிறந்து காரைக்காலில் நெல் அறுவடைக்கு ஆங்காங்கே தயாராகிவரும் சூழலில், செபஸ்தியாா் ஆலயத்தில் தோ்பவனி திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி மாலை முதல் இவ்வாலயத்துக்கு திரளான பக்தா்கள் வரத் தொடங்கினா். பக்தா்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாருக்கு சிறப்பு திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டன. பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மற்ற இரு தோ்களில் சீடா்கள் சொரூபத்துடன் தோ் பவனி இரவு நடைபெற்றது. தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் சென்று பிறகு நள்ளிரவு ஆலயத்தை சென்றடைந்தது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிா்வாகத்தினா் மற்றும் தருமபுரம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT