தமிழ்நாடு

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கைதான 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

DIN

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8 ஆம் தேதி இரவு சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அப்துல்சமீம் (32), தவுபீக் (28) ஆகியோரை தனிப்படை போலீஸார் கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரையும் 28 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT