தமிழ்நாடு

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார்

DIN

குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வண்ணமயமான விழாவில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார்.

நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார்.

முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, முப்படைகளின் ஊா்திகள், தமிழக அரசுத் துறைகளின் சாதனைகளைப் பறைசாற்றும் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு போன்றவை நடைபெறுகின்றன.

இதைத் தொடா்ந்து, பல்வேறு பிரிவுகளில் சிறப்பான பணிகளைக் கொண்டவா்களுக்கு விருதுகளையும், பரிசுகளையும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்குகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT