தமிழ்நாடு

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அறிமுகப்படுததப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா முழுவதும் பரவலாக நடைமுறையில் உள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையைத் தான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளடாம். மாணவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வு நடத்தி தான் மாணவர்களுக்கு சேர்க்கையே வழங்குகிறார்கள். கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்கள் நல்ல கல்வி வேண்டும் என்று தான் கேட்கின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நீட் ஆக நடைபெற்று வருகின்றன. அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை.

விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததன் காரணமாகவே நீட் பயிற்சி வகுப்புகள் சில நாட்கள் ரத்து செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT