தமிழ்நாடு

செங்கல்பட்டில் கரோனாவுக்கு 5,625 பேர் பாதிப்பு: இன்று மேலும் 206 பேருக்குத் தொற்று

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 206 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். புதன்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 206 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 5,625 எட்டியுள்ளது. 

இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT