முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரத்தில் தையல் தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தையல் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் 7,500 வீதம் வழங்கிடக் கோரி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
ராமேசுவரத்தில் தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தையல் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் 7,500 வீதம் வழங்கிடக் கோரி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நாடு முழுவதிலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்தனர். தமிழக அரசு சார்பில் ரூ 1000 மற்றும் ரேசன் கடைகளில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டது. 

மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இரண்டு ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தையல் தொழிலாளர்களுக்கு 40 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு ஆயிரம் வழங்கி உள்ளனர். மீதமுள்ள 60 சதவீத பணியாளர்களுக்கு இன்று வரை வழங்கிடவில்லை இதனைக் கண்டித்தும், 6 மாதங்களுக்கு தையல் தொழிலாளர்களுக்கு மாதம் 7.500 வீதம் வழங்கிடக் கோரி ராமேசுவரம் தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில்  தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவி எம்.ஆசா தலைமை வகித்தார். எஸ்.விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ஞானசேகர்,கிளை பொறுப்பாளர்கள் வசந்தா, முரகவள்ளி,நாகலட்சுமி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.