முகப்பு
தமிழ்நாடு

ஆம்பூர் அருகே 100 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி

ஆம்பூர் அருகே கிராமத்தின் அருகிலுள்ள மலைமீது விளையாடச் சென்ற சிறுவர்கள் பாறைமீது தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி
பகிர்:

ஆம்பூர் அருகே கிராமத்தின் அருகிலுள்ள மலைமீது விளையாடச் சென்ற சிறுவர்கள் பாறைமீது தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்த  பிரபுவின் இரு மகன்கள் நிதீஷ் மற்றும் லோகேஷ் அங்குள்ள மலைப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றபோது பாறை மீது தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்து நதீஷ் (5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் லோகேஷ் (6) படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உமர்ஆபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.