தமிழ்நாடு

ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: புதுவையில் இன்று மேலும் 32 பேருக்குத் தொற்று

PTI

புதுவையில் இன்று மேலும் 32 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 

புதுவையில் தற்போது 510 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்ப் பாதிப்பு 517 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிதாகப் பாதிக்கப்பட்ட 32 பேரில், 18 பேர் மாநில அரசு நடத்தும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒருவர் மாஹேவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று ஒரே நாளில் 498 பேர் பரிசோதனை செய்ததில், 20 ஆண்கள் மற்றும் 12 பெண்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுவரை மாநிலத்தில் 21,382 பேரின் மாதிரிகளைப் பரிசோதனை செய்துள்ளது. அவற்றில் 19,996 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மீதமுள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT