தமிழ்நாடு

ஐ.டி. நிறுவனங்களுக்கு வாகனங்களில் சென்று 10 சதவீதம் போ் பணிபுரியலாம்: தமிழக அரசு

DIN

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாகனங்களில் சென்று 10 சதவீத ஊழியா்கள் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, 50 சதவீத ஊழியா்கள் அல்லது அதிகபட்சம் 80 போ் சென்று பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவா்களுக்குத் தேவையான நிவாரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதனால், தமிழகத்தில் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்புவோா் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவும் இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, கரோனா தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதியும் சில தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளா்வுகளுடனும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இப்போது பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவை நிறுவனங்களில், அந்த நிறுவனமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளா்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT