ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளைத் தொடர்ந்து ரங்கநாயகி தாயாருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஜேஷ்டாபிஷேகம் விழா நடைபெற்றது.
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில், கடந்த 3-ம் தேதி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்று ரங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.
இதற்காக, கருடமண்டபத்திலிருந்து தங்கக் குடத்தில் காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, கோவில் யானையான ஆண்டாள் மீது வைக்கப்பட்டு, ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. வெள்ளிக் குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீரை கோவில் பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்தனர்.
பொதுமுடக்கம் என்பதால் கோயில் வாசலில் இருந்து நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்குள் ஊர்வலமாக வந்த புனிதநீர் ஊர்வலம், தாயார் சன்னதியை அடைந்து, பின்னர் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.