தமிழ்நாடு

பாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்

தினமணியின் பாரதியார் விருது பெற்ற  எட்டயபுரத்தை சேர்ந்த பாரதி ஆய்வாளர் திரு. இளசை மணியன்  (78) அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி

DIN

தினமணியின் பாரதியார் விருது பெற்ற  எட்டயபுரத்தை சேர்ந்த பாரதி ஆய்வாளர் திரு. இளசை மணியன்  (78) அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.

அவரது இயற்பெயர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி கடந்த ஆண்டு காலமானார். பாரதி ஆய்வு, இலக்கிய திறனாய்வு, வரலாற்று ஆய்வு , கதை கவிதை மொழிபெயர்ப்பு, செய்தி விமர்சனம் பாரதி விழா, இலக்கிய விழாக்கள் நடத்துவது, வீதி நாடகங்கள் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபாடு கொண்டவர். பாரதி தரிசனம் என இரண்டு பாகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 

மேலும், ரகுநாதன் கட்டுரைகள் மூன்று தொகுப்பு நூல்கள், புதுமைப்பித்தனின் கடைசி நாட்கள், புதுமைப்பித்தன் பற்றி ஆர்கே கண்ணன், ஆர் நல்லகண்ணு கட்டுரைகள் இரண்டு தொகுப்பு நூல்கள் என பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி இலக்கியச் செல்வர் , புதுவை அரசின் பாரதி விருது, அறிஞர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பல்வேறு இலக்கிய மன்றங்களின் சார்பில் விருதுகள் பெற்றுள்ளார். 

இளசை மணியனின் சேவையை பாராட்டி அவருக்கு தினமணியின் பாரதியார் விருது கடந்த ஆண்டு ஆளுநர் வழங்கினார். பாரதி குறித்து இவரது வழிகாட்டுதலில் ஆய்வு செய்து மூன்று மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT