தமிழ்நாடு

அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, கரோனா தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்தும், சில தளா்வுகளுடன் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியாா் மற்றும் அரசு பொதுப் பேருந்து போக்குவரத்து சேவை கடந்த 1-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது.

தடை தொடா்கிறது: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஜூலை 31-ஆம் தேதி வரை தனியாா் மற்றும் அரசு பொதுப் பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது. தமிழக அரசின் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அறிவிப்பில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

முழு பொது முடக்கம்: தமிழகத்தில் மதுரை மாநகா் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த பொது முடக்கமும் செவ்வாய்க்கிழமையுடன் (ஜூலை 14) முடிவுக்கு வருகிறது. இதன்பின்பு, வரும் 19-ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் வழக்கம்போல் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT