'சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்' - சிலை அவமதிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு'சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்' - சிலை அவமதிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இதையடுத்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடக் கழகத்தினர் மற்றும் பெரியார் அமைப்பினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.
அதனால் அவர் பெரியார்!
சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று திமுக எம்.பி கனிமொழி, 'தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ?
மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.