தமிழ்நாடு

எடப்பாடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டடம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார்

DIN

எடப்பாடி பகுதியில் ரூ.5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட, புதிய நகராட்சி அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளி அன்று திறந்துவைத்தார். 

எடப்பாடி நகராட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் எடப்பாடி நகராட்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி - ஜலகண்டாபுரம் சாலையில் செயல்பட்டு வந்த நகராட்சி அலுவலகத்திற்கு, புதிய கட்டம்  கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது. இதனை அடுத்த எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கட்டப்பணிகள் முழு அளவில் நிறைவுற்ற நிலையில், எடப்பாடி பகுதியில் வெள்ளி அன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி , புதிய நகராட்சி அலுவலக கட்டத்தினை திறந்துவைத்தார்.

மேலும்  கொங்கணாபுரம் ஒன்றித்திற்கு உட்பட்ட வெள்ளாபுரம் ஊராட்சிப் பகுதியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்துவைத்தார். மேலும் எடப்பாடியை அடுத்துள்ள ஜலகண்டாபுரம், வனவாசி , நங்கவள்ளி, வீரகல்புதூர் மற்றும் மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 698 கிராம குடியிருப்புகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட காவிரிக்குடிநீர் வழங்கும் விதமான ரூ.17 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கு அடிக்கள் நாட்டினார். 

மேலும் எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, தமிழக  பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11கோடியே 54 லட்சம்மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுசுவர்கள், சுகாதார வளாகங்கள், அறிவியல் ஆய்வகங்கள்  உள்ளிட்ட கட்டப்பணிகளுக்கும், எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இருப்பாளி ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டுவதற்க்கான கட்டடப்பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவைக்கு வைத்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் ஜலகண்டாபுரம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்க்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வில், செம்மலை, ராஜா, வெங்கடாசலம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேலம் மண்டல நிர்வாக செயற்பொறியாளர் என்.கமலநாதன், மண்டல நிர்வாக இயக்குநர் பி.அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் கே.சென்னுகிருஷ்ணன்,  நகராட்சி பொறியாளர் ஆர்.முருகன் மற்றும் முன்னாள் சேர்மன்.டி.கதிரேசன். ஏ.எம்.முருகன் உள்ளிடோர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளி பின்பற்றி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT