கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் அமைப்பின் யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 5 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.