மின்துறை தனியார்மயமாக்கம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
மின் பகிா்மான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மின் பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தில் உள்ள மின் பகிா்மான நிறுவனங்களைத் தனியாா்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசின் முடிவினை மாநில அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மின் பகிர்மான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் இதனை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.