தமிழ்நாடு

உதகையில் அரசு மருத்துவமனைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

DIN


சென்னை: நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவமனை கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஊழியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மலை மாவட்டமான நீலகிரி, சுற்றுலா சாா்ந்த மாவட்டமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் சுமாா் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். இருப்பினும் நீலகிரியில் போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் கோவை மாவட்டத்துக்கோ அல்லது அண்டை மாநிலமான கேரளத்துக்கோதான் மருத்துவத் தேவைக்கு செல்ல வேண்டி உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ளவா்களை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஏராளமானோா் உயிரிழக்கும் சூழல் தற்போது உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஜூலை மாத முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT