முகப்பு
தமிழ்நாடு

கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பகிர்:


சென்னை: கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரே நாளில் 3,144 ஆக உயர்ந்தது எப்படி என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரையில் ஸ்டாலின் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்தது எப்படி?

கரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும். கரோனா மரணத்தைப் போலவே கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் எனறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.