முகப்பு
தமிழ்நாடு

கேளம்பாக்கம் செல்ல இ- பாஸ் பெற்றார் ரஜினிகாந்த்

சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று இ- பாஸ் எடுத்துள்ளார். 

Updated On : 23 ஜூலை, 2020 at 3:52 PM
ரஜினிகாந்த்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:29 PM

சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இ- பாஸ் எடுத்துள்ளார். 

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த நிலையில் கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும், கேளம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனது மகள், மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. 

இதையடுத்து, ரஜினிகாந்த் இ- பாஸ் பெற்று தான் கேளம்பாக்கம் வீட்டுக்குச் சென்றாரா? என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் பெற்றாரா என பின்னர் ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என்றார். 

Advertisement

இந்நிலையில் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்துள்ளார்.

மருத்துவக் காரணங்களுக்காக செல்வதாகவும், கார் ஓட்டுநருடன் செல்வதாகவும் அந்த இ- பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு இ- பாஸ் வழங்கப்பட்ட தேதியாக நேற்றைய தேதியும் (ஜூலை22) பயண தேதியாக இன்றைய தேதியும் (ஜூலை 23) அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.