மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி,இருவர் படுகாயம் 
தமிழ்நாடு

மதுராந்தகம் சாலை விபத்தில் பெண் பலி: இருவர் படுகாயம்

மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் தினக்கூலி பெண் பணியாளர் பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

DIN

மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் தினக்கூலி பெண் பணியாளர் பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த ஈசாக், திலகம், மாரியம்மா ஆகிய மூன்று பேர்களும் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் மதுபான பாட்டில் கழுவும் தொழிற்சாலையில் னக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு, எதிரேயுள்ள பாட்டில்கள் கழுவும் இடத்திற்கு பைக்கில் வந்தனர். அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஈசாக் இறந்து போனார். உடன் வந்த திலகம், மாரியம்மா ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்தனர்.விபத்தில் சிக்கிய அவர்களை உடனடியாக மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT