தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு: நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவு

DIN

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச் சாலை வில்லியனூர் பகுதி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் வியாழக்கிழமை காவித் துண்டு அணிவித்தனர். இதையடுத்து, அதிமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும், எம்ஜிஆர் சிலையை அவமதித்தது மட்டுமின்றி, பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இச்சம்பவத்துக்கு தமிழகத்தில் இருந்து பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததோடு தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் இச்சம்பவம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT