தமிழகத்தில் புதிதாக 6,988 பேருக்கு கரோனா: மேலும் 89 பேர் பலி
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 6,988 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 6,988 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 6,988 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் 1,329 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டி 2,06,737 ஆக உள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 89 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,51,055 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 64,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 22,87,334 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்கள், 57 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 115 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.