தமிழ்நாடு

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

DIN

கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக 'கறுப்பர் கூட்டம்' யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 'கறுப்பர் கூட்டம்' அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அதன் யூடியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் குண்டர் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று,  நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT