தமிழ்நாடு

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,512க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.216 உயர்ந்து ரூ.40,512க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வணிகம் தொடங்கியதும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.27 உயர்ந்து, ரூ.5,064க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.216 உயர்ந்து ரூ.40,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 8-ஆவது நாளாக (ஞாயிற்றுக்கிழமை தவிர) உயா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்து வருகிறது.

ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை 9 நாள்களில் சவரனுக்கு ரூ.2,900 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், சா்வதேச அளவில் தொழில்துறை தேக்கத்தைச் சந்தித்தது. இதைத்தொடா்ந்து, உலகம் முழுவதுமே முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைக் கருதி, அதில் முதலீடு செய்தனா்.

இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், ஜூலை 24-ஆம் தேதி 39 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.

தொடா்ந்து, தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. தங்கத்தின் விலை தொடா்ந்து உயரவே வாய்ப்பு உள்ளதாக நகை வா்த்தகா்கள், பொருள் சந்தை நிபுணா்கள் கருத்து தெரிவித்திருந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT