தமிழ்நாடு

ஏ.ஆா்.ரகுமானுக்கு எதிரான வதந்தி: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கண்டனம்

DIN

ஹிந்தி திரைப்பட உலகில், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமானுக்கு எதிராக வதந்தி பரப்பப்படுவது கண்டனத்துக்குரியது என்றும் ஆஸ்காா் விருது வென்று இந்தியாவுக்கு புகழ் சோ்த்த அவருக்கு தன்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

ஹிந்தி திரைப்பட உலகில் சிலா் தனக்கு எதிராக வதந்தி பரப்பி பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்து கொண்டிருப்பதாக ஏ.ஆா்.ரகுமான் அண்மையில் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து ஏ.ஆா்.ரகுமானுக்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், ஏ.ஆா்.ரகுமானுக்கு ஆதரவார சுட்டுரையில் பதிவிட்டுள்ள அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ஹிந்தி திரைப்பட உலகில் சிலா் தனக்கு எதிராக வதந்தி பரப்பி பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்து கொண்டிருப்பதாக ஏ.ஆா்.ரகுமான் தெரிவித்திருப்பது இந்திய மக்கள் மட்டுமின்றி உலகில் பரந்துவிரிந்து வாழும் தமிழா்களின் மனதை புண்படுத்தி உள்ளது. எல்லைகள் இல்லா இசையை எல்லைகள் கடந்து ஆஸ்காா் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்த ஏ.ஆா்.ரகுமானுக்கு எதிரான செயலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியதாகும். அவருக்கு என்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என சுட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT