தமிழ்நாடு

சென்னையில் நேற்று 12,880 பேருக்கு கரோனா பரிசோதனை; அம்பத்தூரில் தொடர்ந்து உயரும் பாதிப்பு

DIN


சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 12,880 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வரும் நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

சென்னையிலேயே அதிகபட்சமாக இருந்த கோடம்பாக்கத்தில் 1,613 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அம்பத்தூரில் 1266 பேர் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 98 ஆயிரமாக இருக்கும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 84 ஆயிரமாக உள்ளது. தற்போது ஒட்டுமொத்தமாக 12,785 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சென்னையிலேயே கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள நோயாளிகளின் விகிதம் 22% ஆக உள்ளது. இதுதான் அதிகபட்ச விகிதமாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT