முகப்பு
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் பேருராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கௌரவிப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் டாக்டர்.கமல்ஹாசன் அறிவித்த நாமே தீர்வு திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டியில் சுகாதார பணியாளர்கள், சமூக ஆர்வலர்களை கௌரவிக்கப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
கும்மிடிப்பூண்டி நிகழ்வில் பங்கேற்றவர்கள்
பகிர்:

மக்கள் நீதி மய்யம் தலைவர் டாக்டர்.கமல்ஹாசன் அறிவித்த நாமே தீர்வு திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டியில் சுகாதார பணியாளர்கள், சமூக ஆர்வலர்களை கௌரவிக்கப்பட்டனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் டாக்டர்.கமல்ஹாசன் அறிவித்த நாமே தீர்வு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் சுகாதார பணியாளர்கள், சமூக ஆர்வலர்களை கௌரவித்து அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

மக்கள்நீதி மையம் பொதுச்செயலாளர்  ஏ.ஜி.மெளரியா,மாநில இளைஞர் அணிசெயலாளர் கவிஞர் சினேகன், சென்னை மண்டல மாநில இளைஞர் அணிசெயலாளர் பால் பிரதீப் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி, மாவட்டச் செயலாளர் டி. தேசிங்குராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் இரண்டு கட்டமாக பேரூராட்சி சுகாதார பணியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு  மாவட்ட இளைஞரணி செயலாளர் என்.லோகேஷ்ராஜ்  ஏற்பாட்டில் அரிசி காய்கறிகள், மளிகை பொருட்கள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில்  கும்மிடிப்பூண்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கமலகண்ணன் நிர்மல் ராஜ்,  நவீன், ஜெயசூர்யா, விமல் ராஜ், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →