தமிழ்நாடு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டெருமை தாக்கி கர்ப்பிணிப் பெண் சாவு

DIN


கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன். 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி(28), கடந்த 21 ஆம் தேதி அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அப் பகுதியில் மறைந்திருந்த காட்டெருமை அவரை தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிக அளவில் உலா வருகின்றது. இவற்றை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT