ஸ்ரீ வரலட்சுமி விரதத்தையொட்டி சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர் கோவிலில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகியம்மனுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.  
தமிழ்நாடு

ஸ்ரீ வரலட்சுமி விரதம்: சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் 

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவராத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் உடனமர் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவராத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் உடனமர் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

ஆடி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ வரலட்சுமி விரதத்தையொட்டி சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் உடனமர் சௌந்தரநாயமியம்மனுக்கு திருநீறு, சந்தனம், திருமஞ்சமனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யப்பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களைக்கொண்டும், பச்சை பட்டுபுடவை உடுத்தியும், வெள்ளிகாப்பு சாத்தப்பட்டும் பூஜைகள் செய்யப்பட்டன. 

இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ வரதலட்சுமி விரதம் அன்று பெண் பக்தர்களால் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பாடல்கள் பாடப்பட்டு சுவாமிகளை வழிப்பட்டுச் செல்வது வழக்கம். நிகழாண்டு  கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்லவில்லை. கோவில் அர்ச்சகர் மட்டுமே ஆகமவிதிகள் படி பூஜைகளை செய்தார். 

தமிழகரசு ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று இக்கோவிலை பக்தர்கள் வழிப்பாட்டுக்காக திறக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT