தமிழ்நாடு

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வர் பழனிசாமி கடிதம்

DIN


சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி தலைசிறந்த 9 வானூர்தி (விமானம்) நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
 யுனைடெட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக், போயிங், லாக்ஹீட் மார்டின், சாப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், ஏர்பஸ், லியானார்டோ நிறுவனம், ஹனிவெல் ஆகிய 9 வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT