முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு

திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது), பொதுநல அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தன்னாட்சி பெற்ற அமைப்பாக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். 

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வரையிலான மின்சார சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக வனம், சுரங்கம், நீர்ப்பாசன சட்டங்களில் திருத்தம் செய்வதைக் கைவிட வேண்டும். விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூரிலிருந்து காவிரி, டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு முன்பாக வாய்கால்கள் முழுமையாக தூர்வாரப்பட வேண்டும். 

காவிரி, டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடித்து கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள், பொதுநல அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →