முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 25 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கரோனா தொற்று

​தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,244. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் 42.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 11 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 610 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,316 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய தேதியில் 11,345 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 4 ஆம் நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 14,101 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,28,534 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →