முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
கோப்புப் படம்
பகிர்:

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையிலும், 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வினை எழுதிடாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் தேர்வு நடைபெறவுள்ளது.
மேற்குறிப்பிட்ட தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உட்பட) 04.06.2020 (வியாழக் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று HALL TICKET என்ற வாசகத்தினை CLICK செய்து தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேற்காண் தேர்வினை எழுதவுள்ள மாணவர்கள் 04.06.2020 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து மாணவர்களே தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்
பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரால் நுழைவுச் சீட்டு வழங்கிடும் போது மாணவர்களுக்கான நேர அட்டவணை (Time Schedule) தெரிவித்து தனிமனித இடைவெளியை கடைபிடித்திடும் வகையில் கட்டம் வரைந்து அதற்குள் நின்று தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற்றிட வேண்டும்.
மேலும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மற்றும் வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களுக்குரிய நுழைவுச் சீட்டு தலைமை ஆசிரியர் மூலம் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →