தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.        

தமிழகத்தில் ஊரடங்கு முன்னிட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கக் கூடிய விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ 7500 நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் கடையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு 5 கிலோ அரிசி மளிகை தொகுப்பு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                       

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பால்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜய முருகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் திருமலை நகரச் செயலாளர் ஜெயக்குமார் ஒன்றிய செயலாளர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT