தமிழ்நாடு

மருத்துவ கழிவுகள் முறையாக அழிக்கவில்லை என்று ஸ்டாலின் கூறுவது உண்மையில்லை: கே.சி கருப்பண்ணன்

DIN

கரோனா மருத்துவ கழிவுகள் முறையாக அழிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் கூறுவதில் உண்மை இல்லை எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன்  பேட்டியளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன்  

தமிழகத்தில் சுற்றுச்சூழல் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக மத்திய அரசின் பாராட்டுக்கள் மற்றும் விருதுகளையும் பெற்றுள்ளது என்றார். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகின்றது எனவும் சுற்றுச்சூழல் துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில்  முதல்கட்டமாக 50 ஆயிரம் மரங்களை நடவும் அதனைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் மரங்களை நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8 வழிச்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள் திட்டம் முடிந்த பிறகு மீண்டும் நடப்படும் தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை அழிக்க 32 தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு உண்மை அல்ல என்றார். 

மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை நடும் தன்னார்வலர்கள் மற்றும் சிறந்த முறையில் பாரமறிப்பவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்குகிறது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT