முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைகோரி வழக்கு 

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Updated On : 6 ஜூன், 2020 at 9:03 PM
பகிர்:

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலத்தில் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

Advertisement

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.