முகப்பு
தமிழ்நாடு

முதன்முறையாக பரிசோதனை விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

​தமிழகத்தில் மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் பற்றிய விவரங்களை முதன்முறையாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


தமிழகத்தில் மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் பற்றிய விவரங்களை முதன்முறையாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளாவோர், பலியாவோர் உள்ளிட்டவை அடங்கிய தகவல்களை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டு வருகிறது. இதில், ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வந்தன.

இதைத் தொடர்ந்து, மாவட்டவாரியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என்று அரசின் வெளிப்படைத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பிலிருந்து விமரிசனங்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில், முதன்முறையாக மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட விவரங்களை தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,21,950 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் விவரம் (தகவல்: ஐசிஎம்ஆர்)

வ.எண்

மாவட்டம்

ஐசிஎம்ஆர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை
1.அரியலூர்3,950
2.செங்கல்பட்டு13,958
3.சென்னை1,21,950
4.கோவை22,872
5.கடலூர்11,918
6.தருமபுரி9,854
7.திண்டுக்கல்7,582
8.ஈரோடு13,421
9.கள்ளக்குறிச்சி8,653
10.காஞ்சிபுரம்9,885
11.கன்னியாகுமரி18,366
12.கரூர்8,218
13.கிருஷ்ணகிரி6,565
14.மதுரை14,102
15.நாகப்பட்டினம்7,958
16.நாமக்கல்7,727
17.பெரம்பலூர்3,999
18.புதுக்கோட்டை6,243
19.ராமநாதபுரம்7,074
20.ராணிப்பேட்டை5,480
21.சேலம்22,751
22.சிவகங்கை5,400
23.தென்காசி7,163
24.தஞ்சாவூர்17,820
25.தேனி16,945
26.நீலகிரி5,604
27.திருவள்ளூர்11,065
28.திருவாரூர்8,448
29.திருச்சி14,453
30.திருநெல்வேலி17,624
31.திருப்பத்தூர்9,911
32.திருப்பூர்8,153
33.திருவண்ணாமலை21,996
34.தூத்துக்குடி13,227
35.வேலூர்16,279
36.விழுப்புரம்9,795
37.விருதுநகர்10,803
 மொத்தம்5,27,212
முழு கட்டுரையைப் படிக்க →