முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோளங்குளம், மற்றும் படிக்காசு வைத்தான்பட்டி ரூ 70 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகளை சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோளங்குளம், மற்றும் படிக்காசு வைத்தான்பட்டி ரூ 70 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகளை சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு ஊராட்சிக்குட்பட்ட சோளங் குளம் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி என இரண்டு கண்மாய்கள்உள்ளன. இந்த கண்மாய்களை நீண்டகாலமாக பராமரிக்காததன் காரணமாக கரைகள் வலுவிழந்தும், மதகுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் இந்த கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து கால்வாயில் முட்புதர்களும் சீமை கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன.

எனவே கால்வாயை தூர்வாரி கரைகளையும் மதகுகளையும் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . இதையடுத்து விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு சார்பில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 70 லட்சம் மதிப்பில் இந்த கண்மாய்களை சீரமைக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கலந்துகொண்டு பணிகளை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் சிவராம்குமார், ஒன்றிய செயலாளர்கள்முத்தையா, மயில்ச்சாமிி, மாவட்ட கவுன்சிலர்கள் கணேசன் வசந்தி மான்ராஜ், அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணை தலைவர் தைலாகுளம் மணிமுள்ளிக்குளம் பஞ்சாயத்து தலைவர் செண்பகமூர்த்தி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி முருகன், ஊராட்சி செயலர் ஆனந்தராஜ் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →