முகப்பு
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் முகக் கவசம்: தமிழக அரசு முடிவு

​ரேஷன் அட்டைதாரர்களுக்காக முகக் கவசங்களை வாங்க தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:


ரேஷன் அட்டைதாரர்களுக்காக முகக் கவசங்களை வாங்க தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம், ஏழை மக்கள் முகக் கவசம் வாங்குவதிலுள்ள பொருளாதார சிக்கல் பற்றியும் கேள்விகள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஜூன் 2-ஆம் தேதி தெரிவித்தார்.

இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13.48 கோடி முகக் கவசங்களை விலை நிர்ணயம் செய்து வாங்குவதற்கு தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →