தமிழ்நாடு

சென்னையில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை: இடதுசாரிகள் வலியுறுத்தல்

DIN

சென்னையில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

கே.பாலகிருஷ்ணன்: சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் நோய்ப் பரவல் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு பொது முடக்கத்தை அமலாக்கலாமா என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். முழு பொது முடக்க அமலாக்கம் குறித்து அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் போதிய கால அவகாசம் கொடுத்து அறிவிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.

இரா.முத்தரசன்: சென்னை மாநகரில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி, அரசே நேரடியாக மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT