தமிழ்நாடு

மதுரை-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்: நாளை முதல் நேரம் மாற்றம்

DIN

மதுரை-விழுப்புரம் இடையே தினசரி இயக்கப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயிலின் நேரம், ஜூன் 13-ஆம் தேதி முதல் மாற்றப்படவுள்ளது.

சென்னையை தவிர, தமிழகத்தின் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. இதில், மதுரை-விழுப்புரம் இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயிலும் அடங்கும். இந்த ரயில், மதுரையில் இருந்து தினசரி 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் அடையும். இதுபோல, மறுமாா்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை சந்திப்பை அடையும்.

இந்நிலையில், மதுரை-விழுப்புரம் இடையே தினசரி இயக்கப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயிலின் நேரம் ஜூன்

13-ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து தினசரி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு விழுப்புரம் சந்திப்பை அடையும். மறுமாா்க்கமாக, விழுப்புரம் சந்திப்பில் இருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரையை அடையும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT