தமிழ்நாடு

திருப்பதிக்கு வந்து நிராசையுடன் திரும்பிச் சென்ற பக்தர்கள்

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வந்த பக்தர்கள் சிலர் தரிசனம் கிடைக்காமல் நிராசையுடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

DIN

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வந்த பக்தர்கள் சிலர் தரிசனம் கிடைக்காமல் நிராசையுடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்தில் வியாழக்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 ஆயிரம் தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமும், 3 ஆயிரம் தரிசனம் டிக்கெட் நேரடி முன்பதிவு டோக்கன்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரடி தரிசன டோக்கன்கள் வரும் ஜூன் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டது. 

இதை  அறியாத பக்தர்கள் சிலர் திருப்பதிக்கு வந்து தரிசன டோக்கன் பெற சீனிவாசம், விஷ்ணுநிவாசம், அலிபிரி உள்ளிட்ட இடங்களில் காத்திருக்க தொடங்கினர். அங்கு வந்த ஊழியர்கள் தரிசன டோக்கன்கள் 17ம் தேதி வரைக்கும் வழங்கப்பட்டு விட்டதைத் தெரிவித்தனர். அத்தனை நாட்கள் திருப்பதியில் தங்க முடியாத பக்தர்கள் அங்கிருந்து அப்படியே நிராசையுடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும் சிலர் தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன்கள் குறித்து அறியாமல் அலிபிரியிலிருந்து பேருந்தில் திருமலைக்குச் சென்று அங்கு உண்மை நிலையை அறிந்து திரும்பி வர நேர்ந்தது. அதனால் தேவஸ்தானம் இனி தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே பக்தர்களைப் பேருந்து பயணச் சீட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அலிபிரி சோதனை சாவடியிலும் தரிசன டிக்கெட் இருப்பவர்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பக்தர்கள் தரிசனம் குறித்து நன்கு தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லிஜோ ஜோஸ் பெல்லிசரி படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரஹ்மான்!

ஹமாஸ் தாக்குதலில் பலரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர்! 2 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக..

யூடியூப் சேனல் பார்வைகளுக்காக இப்படி செய்ய வெட்கமாக இல்லையா? முன்னாள் கேப்டனை வெளுத்து வாங்கிய கௌதம் கம்பீர்!

தெய்வ தரிசனம்... எம பயம், பாவங்கள் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கடையூர்!

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி! | TN Assembly

SCROLL FOR NEXT