முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,487

​தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,956 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,487 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 30 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் 12 பேரும், அரசு மருத்துவமனையில் 18 பேரும் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.

எனினும், இன்று ஒரேநாளில் 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 23,409  பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 18,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.