கொல்லிமலை வளப்பூர் நாடு பகுதியில் மிளகு தோட்டத்தில்  வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். 
தமிழ்நாடு

கொல்லிமலையில் வேப்ப எண்ணெய் கொண்டு வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி தொடக்கம்

கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

DIN

கொல்லிமலையில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டு மிளகு கொடிகள் படர விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் கூட்டம் மிளகு கொடிகளைச் சேதப்படுத்தி வருகின்றன. கொல்லிமலை வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டி கிராமப் பகுதிகளில் மிளகு கொடிகளில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இலைகளையும், காய்களையும் நாசப்படுத்தி உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கவலையடைந்தனர். 

தற்போது  மிளகு அறுவடைக் காலமாகும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வெட்டுக்கிளிகள் மிளகு கொடிகளை முழுவதும் தின்று வருகிறது. மிளகு கொடி வளர 10 ஆண்டுகள் வரையாகும். இங்குள்ள  பழங்குடியின விவசாய மக்கள் மிளகு விளைச்சலை நம்பித்தான் வாழ்வை நடத்துகின்றனர். வெட்டுக்கிளிகள் அட்டகாசம் அதிகரிக்கவே அவற்றை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.   

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியது: 
கொல்லிமலையில் இரண்டு விவசாயிகளின் மிளகு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவற்றை அழிக்க வேப்ப எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து மிளகு கொடிகளில் அடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் சாதாரண வகையானது தான். பாலைவன வெட்டுக்கிளிகள் என நினைத்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT