தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 49 பேர் பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 1,454 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 61.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 919 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 34,245 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 49 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், இன்று மொத்தம் 1,438 பேர் கரோனா தொற்றிலிருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 7,48,244 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் மொத்தம் 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

GST வரிகள் குறைப்பு! TV, AC வாங்குபவர்கள் கவனத்திற்கு! | Nirmala Sitharaman | BJP

திருவோணம் வந்தல்லோ... மடோனா செபாஸ்டியன் !

சிவகார்த்திகேயனின் மதராஸி: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: செப். 8 முதல் கனமழை!

SCROLL FOR NEXT