தமிழ்நாடு

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்: ஸ்டாலின்

DIN

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவப் படைகளுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எல்லையில் இந்திய - சீன ராணுவப் படைகளுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில், லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்!

22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT