காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதி கிராம உதவியாளர் பலி
காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதியதில் கிராம உதவியாளர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி மோதியதில் கிராம உதவியாளர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவாக்கம் அருகே பிள்ளையார் சத்திரத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் என் மோகன்தாஸ் (42)இவர் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் துர்க்கை அம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது.
இந்த விபத்தில் மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மோகன்தாஸ் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவேடல் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.