தமிழ்நாடு

தனியாா் துறை வேலைக்கு தனி இணையதளம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்

DIN

தனியாா் துறை நிறுவனங்களை இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்களின் வசதிக்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெற நினைப்போா் இந்த இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

இந்த இணையதள வசதியை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் அமைச்சா் நிலோபா் கபில், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT