விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர்.
விழுப்புரத்தில் 458 பேருக்கு கரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதில் 363 பேர் குணமடைந்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்றில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் அருகே விராட்டிகுப்ப்ம் பாதையைச் சேர்ந்த 70 வயது பெண் சகுந்தலா உயிரிழந்தார். இதேபோல் விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் சாணாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 80 வயது சகுந்தலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஒரு வார காலமாக இவர்கள் காய்ச்சல் இருந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் இவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விழுப்புரம் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 20 பேருக்கு புதன்கிழமை தொற்று அறிகுறியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.