தமிழ்நாடு

தமிழக வீரா் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதி-அரசு வேலை

DIN

லடாக் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் பலியான தமிழக வீரா் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

இந்திய-சீன எல்லையில் லடாக் பகுதியில், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்ததில் இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்துள்ளனா் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த கே.பழனி உயிரிழந்தாா்.

இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல் தியாக உணா்வோடு இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் தம்மை அா்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்துள்ளாா் ராணுவ வீரா் பழனி. அவரது குடும்பத்துக்கும், பிற ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

நிதி-அரசு வேலை: இந்தியாவுக்காக தனது உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரா் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழக அரசு சாா்பில் மரியாதை அளிக்கவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT